இஸ்லாமிய திருமணச் சட்டம் எப்போது மாறும்? நாடாளுமன்றில் கேள்வியெழுப்பும் தயாசிறி

Parliament of Sri Lanka Sri Lankan Peoples Dayasiri Jayasekara Marriage
By Rakshana MA 2 months ago
Rakshana MA

Rakshana MA

எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காதி நீதிமன்றங்களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் எடுக்க வாய்ப்புகள் இல்லை. பெண்களுக்கு அங்கு நீதிபதிகளாக கடமையாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

கிழக்கு தொடருந்து மார்க்கங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கிழக்கு தொடருந்து மார்க்கங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

இஸ்லாமிய திருமணச்சட்டம் 

அந்த சட்டம் பற்றி எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. விசேடமாக திருமணம் செய்யும் வயது பற்றிய பிரச்சினை காணப்படுகிறது.

இஸ்லாமிய திருமணச் சட்டம் எப்போது மாறும்? நாடாளுமன்றில் கேள்வியெழுப்பும் தயாசிறி | Dayasri Talks About Islamic Marriage Law

ஆகவே நான் கேட்கிறேன் எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

விரைவாக இதனை செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்

மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு

மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW