ரமழான் நாள் 7 : அதிகமாக குர்ஆன் ஓதுங்கள்
முஸ்லிம்கள் மத்தியில் அல்-குர்ஆன் மிகவும் பெறுமதியான பொக்கிஷங்களை கொண்ட புத்தகமாக போற்றப்படுகின்றது.
இது அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். ரமழான் மாதத்தில் குர்ஆனை படிப்பது மிகவும் முக்கியமானது.
இந்த மாதத்தில் குர்ஆனை ஓதுவதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கம் அதிகரிப்பதோடு ஆன்மீக வளர்ச்சியும் அதிகரிக்கின்றது.
குர்ஆன் ஓதுவதன் நன்மைகள்
அருள்மிகு மாதமான இந்த மாதத்தில் குர்ஆன் ஓதுவதன் மூலம் பல நன்மைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில,
- ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- உலக மற்றும் மறுமைக்கான அறிவு தொடர்பில் தெளிவு கிடைக்க உதவி செய்யும்.
- மனதிற்கு ஆழமான அமைதியை அளிக்கிறது.
இந்நிலையில் முஃமீன்கள் அல்லது முஸ்லிம்கள் ரமழான் மாதம் முழுவதும் குர்ஆன் ஓதுவது மிகவும் சிறப்பான செயலாகும். மேலும், இந்த மாதத்தில் அல்லாஹ்வின் அருள் மிகுதியாக கிடைக்கும் ஆகையால் இவ்வாறான செயல்கள் மூலம் இன்னும் அல்லாஹ்வின் நெருக்கம் அதிகரிப்பதோடு அருளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ரமழான் மாதத்தை சிறப்பாக கழிக்க வேண்டும் என்றால், குர்ஆனை ஓதுவதை தவிர்க்கக்கூடாது.
இது வாழக்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |