திருப்திகரமான அரச சேவையொன்றினை உருவாக்குவோம் : ஜனாதிபதி
இலங்கையில் திருப்திகரமான அரச சேவையொன்றினை உருவாக்குவோம் என ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியினை உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இன்று (23) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதிவிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,
“இந்த தோ்தல் இலங்கை வரலாற்றில் மிக அதிகமான அரச ஊழியர்கள் அரசாங்கமொன்றுக்கு வாக்குகளை அளித்த தோ்தலாக அமைந்ததென்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பொது மக்களின் பாரிய ஆதரவு
பொது மக்கள் மத்தியில் அரச சேவை பற்றிய ஒரு பாதகமான புலக்காட்சியே அதிகமாக நிலவுகின்றது.
அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்களை பார்க்கும்போது தமது கடமை வாழ்க்கையில் மனநிறைவு கிடையாது.
மக்கள் மகிழ்ச்சியடையாத திருப்தியடையாத அரச சேவையொன்றே எமக்கு இருக்கிறது.
திருப்தியான அரச சேவைகள்
திருப்திகரமான அரச சேவையொன்றை இரு தரப்பினருக்கும் உருவாக்கிக் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது.
சாதகமான அரச சேவைக்காக நாங்கள் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான அவர்களின் பக்கச்சார்ப்பினை இந்த மக்கள் ஆணை சுட்டிக்காட்டி இருக்கிறது.
மேலும் பலம்பொருந்திய சாதகமான அரச ஊழியர்கள் இன்றி எம்மால் முன்நோக்கி நகரமுடியாது.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் புதியதொரு திருப்புமுனையை பெற்றுக்கொள்ளும்போது அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலைப் போன்றே அரச பிரிவின் செயற்பாடும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.
அரசியல் அதிகாரத்துவத்திற்கு எந்த அளவிலான இலக்குகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தபோதிலும் அதற்கு ஏற்ற, அமைந்தொழுகுகின்ற அரச சேவையொன்றை நிர்மாணித்துக்கொண்டால் மாத்திரமே மேற்படி எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் நெறிப்படுத்த முடியும்." என ஜனாதிபதி அநுர குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |