கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா ஏற்பாடுகள் ஆரம்பம் !
ஆண்டு தோறும் நடைபெறும் கல்முனை கொடியேற்ற விழா இம்முறை டிசம்பர் மாதம் 2ஆம் திகதி நடத்த கல்முனை மக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி அவர்களின் தலைமையில் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலர் இணைந்து கொண்டுள்ளனர்.
203ஆவது கொடியேற்றம்
இத்திட்டமிடல் கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அசீம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்சீன் பக்கீர், பொது சுகாதார வைத்திய அதிகாரி, இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிரதிநிதிகள், கடற்படை ஆகிய பல அரச நிறுவனங்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்கள்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் கல்முனை முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு இவ் வருட கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்த ஏதுவாக திட்டமிடல்களை மேற்கொண்டனர்.
மேலும் இது கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203வது வருடாந்த கொடியேற்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |