புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அண்மையில் முடிவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததை அடுத்து அதனை மீளவும் நடத்துமாறு வலியுறுத்தி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
அதற்கமைய, குறித்த மனு இன்று (18) உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை மீளவும் நடத்தப்படாது எனவும் கசிந்த வினாக்களுக்கு சகல மாணவர்களுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படுமெனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |