சர்வதேச நாணய நிதியம் மற்றும் மத்திய வங்கி: முக்கிய உரையாடல்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Rakshana MA Nov 18, 2024 05:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு முதலில் இலங்கை மத்திய வங்கியின்(SCB) அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கலந்துரையாடல் இன்று (18) IMF பிரதிநிதிகளின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், இக் கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (17) நாட்டை வந்தடைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர செய்தி!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர செய்தி!

கடனுதவிக்கான கலந்துயைாடல்கள்

மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்படடும் கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திப்பதற்கும் குறித்த குழுவினால் திட்டமிடப்பட்டுள்ளது.

2024 IMF members visit to srilanka

மேலும் அனைத்து கலந்துரையாடல்களும் நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அதில் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வுகளின் முன்னேற்றம் தொடர்பான மேலதிக தகவல்களை தெளிவுபடுத்தவுள்ளனர்.

குறித்த IMF குழு விஜயத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் நான்காவது தவணை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட கால நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிசி இறக்குமதிக்கு அரசு நடவடிக்கை: புதிய கோரிக்கை!

அரிசி இறக்குமதிக்கு அரசு நடவடிக்கை: புதிய கோரிக்கை!

யானையுடன் புதிய பயணம் ஆரம்பம் : ரணில்

யானையுடன் புதிய பயணம் ஆரம்பம் : ரணில்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW