நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர செய்தி!

Sri Lanka Politician Sri Lanka Sri lanka election 2024 General Election 2024 Parliament Election 2024
By Rakshana MA Nov 17, 2024 11:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள், அதில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க(Saman Sri Ratnayaka) தெரிவித்துள்ளார்.

அநுரவின் அரசியல் சாதனை! மகிந்த தேசப்பிரியவின் கருத்து

அநுரவின் அரசியல் சாதனை! மகிந்த தேசப்பிரியவின் கருத்து

வாக்காளருக்குச் செலவிடும் தொகை

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடும் தொகை அடங்கிய சிறப்பு வர்த்தமானியை கடந்த 15ஆம் திகதி தேர்தல் ஆணையகம் வெளியிட்டது.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் உட்பட 225 ஆசனங்களுக்கு 49 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 284 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர செய்தி! | Urgent News For Parliament Candidates 2024 Electio

வேட்பாளர் செலவின வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், வேட்பாளர் ஒருவர் அதிகளவு செலவு செய்யக்கூடிய மாவட்டம் கொழும்பு எனவும் இதன் பெறுமதி 114 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டது.

ஒரு வேட்பாளர் குறைந்தளவு செலவு செய்யக்கூடிய மாவட்டம் வன்னி மாவட்டம் என்பதுடன் அந்த எண்ணிக்கை 82 ரூபாவாக காணப்பட்டது.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தின் மக்கள் தொகை, மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாவட்ட அளவில் தொடர்புடைய கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர செய்தி! | Urgent News For Parliament Candidates 2024 Electio

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய திகதிக்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையகம் வலியுறுத்துகிறது.

காத்தான்குடியில் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

காத்தான்குடியில் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

வரி குறைப்புக்குக்கு அரசு நடவடிக்கை தேவை : மொட்டுக் கட்சியின் வலியுறுத்தல்

வரி குறைப்புக்குக்கு அரசு நடவடிக்கை தேவை : மொட்டுக் கட்சியின் வலியுறுத்தல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW