வரி குறைப்புக்குக்கு அரசு நடவடிக்கை தேவை : மொட்டுக் கட்சியின் வலியுறுத்தல்
அரசாங்கம் வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயங்களைத் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர்.
பெறுமதி சேர் வரி
எனவே, சாக்கு போக்கு சொல்லாது முன்னதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது போன்று வரிகள் குறைக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றின் அதிகாரம் இல்லாத காரணத்தினால் பெறுமதி சேர் வரியை குறைக்க முடியாது, எரிபொருள் விலையை குறைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியது .
எனினும் தற்பொழுது இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பாரிய ஆணையை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |