போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் அதிரடியாக கைது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வாழைச்சேனையில் (Valaichenai) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம், நேற்றைய தினம் (01) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சால வீதியில் இடம்பெற்றது.
போதைப்பொருள் விற்பனை
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தொடர்பான தகவலின் அடிப்படையில், அதிரடிப்படையினர் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து நடத்திய விசேட சுற்றிவளைப்பில், சந்தேகநபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் வாழைச்சேனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |