வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் : சஜித் பிரேமதாச தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தாம் அதிகாரத்திற்கு வந்த பின் வடக்கு, கிழக்கு மக்களை மையப்படுத்தியதாக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (15) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள்
மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தை பாரிய அபிவிருத்தியின் பால் இட்டு செல்வோம். இதன் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த தற்போதைய பதில் ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மக்களை சந்திக்க சென்றார்.அவரினால் வடக்கு, கிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்ட முடியுமாக இருந்தாலும், அதற்கான இயலுமை அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாட்டை கூட்டவில்லை.
ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த இயலுமை இருக்கின்றது.எனவே அதிகாரத்திற்கு வந்த உடனே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |