வரி திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம்
ஊதியத்தியத்தில் செலுத்தும் வரியை மாற்றியமைப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசு ஏற்கனவே இந்த வரியை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பேச்சுவார்த்தையின் மூலம் செலுத்தும் வரி எவ்வாறு குறைக்கப்படும் என்பதை அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரச வருவாய்
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் இருவரும் வரிகளை குறைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
எனினும் அவர்கள் எவ்வாறு அரச வருவாயை அதிகரிக்கப் போகிறார்கள் என்பதை தெரிவிக்கத் தவறிவிட்டனர் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |