அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் நிர்மாண பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Risad Badhiutheen Sri Lanka Sri Lankan Schools
By Rukshy Aug 29, 2024 02:09 AM GMT
Rukshy

Rukshy

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் நிர்மாண பணிகளுக்காக 200,000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கீடானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தம்பலகாமம் மீரா நகர் வட்டார அமைப்பாளர் அஜீஸ் ஜபருள்ளாவின் கோரிக்கைக்கமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூபின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தீர்மானம் பாராட்டுக்குரியது: ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

ஜனாதிபதி தீர்மானம் பாராட்டுக்குரியது: ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்


இந்நிலையில், நேற்றைய தினம்(28) தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய முதல்வர் M.N.A. அஹமட் நஷ்ரபிடம் உத்தியோகபூர்வ நிதி ஒதுக்கீட்டு கடிதம் கையளிக்கப்பட்டதுடன் வேலைத்திட்ட ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் நிர்மாண பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு | Allocation Of Funds Muslim High School

இந்தநிகழ்வில் தம்பலகாமம் மத்திய குழுத் தலைவரும் அரசியல் அதிகார உயர்பீட உறுப்பினர், மத்திய குழு செயலாளர், மீரா நகர் வட்டார அமைப்பாளர், மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர். 

ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் பங்கு

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் பங்கு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW