மட்டக்களப்பில் அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human Rights Commission Of Sri Lanka Batticaloa Sri Lankan Peoples
By Rakshana MA Jan 18, 2025 08:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பிலுள்ள(Batticaloa) இலங்கை மனித உரிமை ஆணைக்குழு காரியாலத்தில் சில விவசாயிகள் அரசாங்க அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாடானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அரசாங்க அதிபரின் செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை(17) விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

விவசாயிகள் கருத்து  

மேலும், இது தொடர்பாக விவசாயிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

2024, 2025 பெரும் போக செய்கைக்கான முன்னோடிக்கூட்டம் கச்சேரியில் இடம்பெற்றுள்ளதுடன், ஆரம்ப கூட்டம் ஒவ்வொரு பிரதேசத்தில் இடம்பெற்று அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு தற்போது அறுவடைக்கு சில காலம் இருக்கும் நிலையில் ஒரு சில விவசாயிகளின் நலன்கருதி அரசாங்க அதிபர் முன்கூட்டி அறுவடை செய்வதற்கான அனுமதி வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பில் அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Complaint Farmers Hrc Against Batticaloa Governor

இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் யார் என்றால் முதலாளித்துவ வர்க்கம் எனும் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் வேளாண்மையை செய்கின்றவர்கள். அதுமட்டுமல்லாது கூடுதலான வெட்டு இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்கின்ற இவர்களே இவ்வாறான அத்துமீறல் செயற்பாட்டை செய்கின்றனர்.

இவர்கள் விவசாய அமைப்புக்களை சார்ந்து பிரதேசத்தின் கமநல அமைப்புக்களின் தலைவர்களாக திட்ட முகாமைத்துவ உப தலைவர்களாக இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிலேச்சத்தனமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலச்சம் ஏக்கருக்கு மேலாக வேளாண்மை செய்துவரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு அறுவடை செய்ய கொடுப்பதன் மூலமாக ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் .

களத்தில் நின்று விவசாயிகளின் கஷ்ட நஷ்டத்தை பாராத இவர்கள் குளிர் ஊட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு மேசையில் இருந்து எழுதிக் கொண்டு அனுமதி வழங்குவதை ஒரு காலமும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே, இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு மனித உரிமை ஆணைக் குழுவில் முறைபாடு செய்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

அரசாங்க அதிபரின் பதில் 

இதேவேளை, இது தொடர்பாக அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா தெரிவிக்கையில்,

கடந்த 15ஆம் திகதி விவசாயி ஒருவர் கச்சேரிக்கு வருகை தந்து தான் செய்த வயல் நிலங்கள் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகைபடங்களை காண்பித்தார். இருந்தபோதும் கூட்டத்தில் அறுவடை தினமாக ஜனவரி 20 ம் திகதி என தீர்மானிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் வந்து தமது வேளாண்மை அழிவடைவதாகவும் உடனடியாக அறுவடை செய்யாவிட்டால் பாரிய நட்டத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்

மட்டக்களப்பில் அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Complaint Farmers Hrc Against Batticaloa Governor

எனவே, அனர்த்த நிலமையை கருத்தில் கொண்டு அவருக்கு இதனால் பாரிய நட்டம் ஏற்படுமாக இருந்தால் நீங்கள் உங்களுடைய வயலை மட்டும் அறுவடை செய்யலாம். அதுவும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் விவசாய போதனாசிரியர் ஆகியோரின் மேற்பார்வையில் செய்யலாம் என தெரிவித்து அனுப்பிவைத்தேன்.

நட்ட ஈடு வழங்கினாலும் அது அரசாங்கத்துக்கு தான் பண நஷ்டம் ஏற்படும். எனவே அவர் ஒருவரது தனிப்பட்ட விடையத்துக்கு அனர்த்த நிலமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.

இது பொதுவான அறிவித்தல் அல்ல விவசாய கூட்டத்தல் 20ஆம் திகதி அறுவடை என எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படவில்லை. இது தொடர்பாக பல விவசாய அமைப்புக்கள் வந்து, இது போன்ற சம்பவங்களை எங்களால் பார்வையிடமுடியும்.

மேலும், இது ஒரு தனிப்பட்ட விடயம் என்பதால் தங்களுடைய பிரதேசத்தில் இப்படி ஏற்பட்டால் தாங்கள் சென்று பார்த்து சரி செய்வோம். இது தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு வந்து முறையிட தேவையில்லை என கூறிச்சென்றனர் என அராசங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள மக்களுக்கு நீர்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கொழும்பிலுள்ள மக்களுக்கு நீர்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery