அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
Ramanathan Archchuna
By Laksi
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறைப்பாடானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியினால் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |