கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்
50 வருட காலமாக கண்டியில் சமூகப் பணிபுரிந்த வர்த்தகர் மறைந்த ஜெம் லைட் ஏ. எம்.இஸ்மாயில் ஹாஜியாரை, கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தினர் நினைவுகூர்ந்துள்ளனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது, கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் எம். சலீம்டீன் தலைமையில் இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் உப தலைவர் ஏ. சி. எம். ரஹ்மான், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் உமர்தீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
அத்துடன், இந்த நினைவேந்தல் நிகழ்வில் சிங்கள், தமிழ். முஸ்லிம் வர்த்தக சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள், மத்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் எம். வை. அஹமட் அல்-ரஷீட் உள்ளிட்டவர்கள் மற்றும் கண்டி ஜெம் லைட் ஏ. எம்.இஸ்மாயில் ஹாஜியாரின் குடும்பத்தினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |