இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Chandramathi
3 months ago

Chandramathi
ஒரு லட்சத்து 82,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஏல விற்பனை எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திறைசேரி உண்டியல்கள்
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 42,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |