தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Rakshana MA Dec 09, 2024 06:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் குழம்பு(பால் சொதி) வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்சான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.

சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை என்பது இலகுவாக தீர்க்கப்பட வேண்டியது : அதாஉல்லா

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை என்பது இலகுவாக தீர்க்கப்பட வேண்டியது : அதாஉல்லா

அதிகரித்துள்ள விலை..

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

அரிசி, முட்டை, உப்பு மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும்.

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Coconut Shortage In Sri Lanka

மேலும், பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பினால் மதிய உணவுப் பொதி தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலை1,200 ரூபாவில் இருந்து 1,280 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் இதன்போது ஹர்ஷன ருக்சான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்..!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்..!

யாழ். ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது

யாழ். ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW