எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டில் தற்போது நிலவும் அசாதரணமான காலநிலைக்கு தென்மேற்கு பருவமழை தான் காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் காலநிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோவின் கூறியவையின் படி, இலங்கையின் அருகாமையில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகொண்டுள்ளது.
எனினும், இந்த தாழ்வு நிலை, காற்றின் ஓட்டத்தில் மறைமுக விளைவை மட்டுமே ஏற்படுத்துகிறது. பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
வானிலை மாற்றம்
அதேவேளை, கொழும்பு உட்பட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்வதும், பின்னர், குறுகிய காலத்திற்குள் அது நின்றுவிடும் நிகழ்வுகள், காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் நிகழ்கின்றன.
இந்த நிலையில்எதிர்வரும் 3ஆம் திகதிக்குப் பின்னர், தற்போதைய வானிலை நிலைமைகளின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |