தூய அரசியல் முன்னெடுப்போம் : இம்ரான் மஹ்ரூப்
மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியலை முன்னெடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று(15)மாலை இடம் பெற்ற மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமனறத்திற்கு தெரிவாகியுள்ளார்.
தொடர்ந்தும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையில்,
அரசியல் நோக்கங்கள்
எங்களின் வாக்குகளை விற்கவோ அல்லது சொந்த இலாபத்திற்காக பயன்படுத்தவோ பக்கட்டுக்களை நிறைத்து கமிசன் அரசியலையோ செய்ய மாட்டோம்.
மக்கள் எதிர்பார்த்த உண்மை நீதி நியாயமான தூய்மையான அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
மக்கள் எதிர்பார்ப்பு மூலமாக சரியாக தங்களது உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளார்கள் இதன் மூலம் ஊழல் அற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மக்கள் எடுத்துள்ளார்கள்.
மக்களின் உரிமைகள்
இதனால் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் உரிமைகள் அபிவிருத்தி விடயங்களில் மக்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்து மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
மூதூர் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடியுள்ள நிலையில் கடந்த காலங்களில் இரு உறுப்பினர்களை பெற்ற நிலையில் தற்போது ஒரு ஆசனத்தை பெற்றுள்ளோம்.
எனவே வாக்களித்த திருகோணமலை மாவட்ட மக்களுக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறேன் என்று உரையாற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |