நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு : வெளியான தகவல்
நடைபெற்று முடிந்த தேர்லின் முடிவுகளின் பின்னர் ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa)கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
“குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தற்போது தேர்தலுக்குப் பிந்தைய காலம் தொடங்கியுள்ளது. ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த முடியாது.
நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு
ஆகவே, இதன் காரணத்தினால் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதனால் நாடு முழுவதும் தேவையான பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனினும் எந்தப் பகுதியிலும் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை.
மேலும், இதுவரை கைது செய்யப்பட்ட 581 பேரில் 18 வேட்பாளர்கள் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆதரவாளர்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |