கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டவுள்ளது.
இதன்படி, இன்று(25) கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதில் 4 பெண் கைதிகளும் 385 ஆண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் விடுதலை
நாடு முழுவதிலும் அமைந்துள்ள பல்வேறு சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள், திட்டமிட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
குறிப்பாக சிறு குற்றச் செயல்களுக்கு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்கும் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |