கந்தளாயில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

Sri Lanka Police Trincomalee Army Day Sri Lanka Police Investigation
By Rakshana MA Aug 12, 2025 04:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று (11) மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், குறித்த சின்ன குளம் பகுதியின் கரையோரத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘INS ரனா’

திருகோணமலைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘INS ரனா’

கைகுண்டு மீட்பு

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கந்தளாயில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை | Chinna Kulam Hand Grenade

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைக்குண்டு வைக்கப்பட்டிருந்தமைக்கான காரணம் மற்றும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.   

விவாதத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல விடயங்கள் வெளிப்படுத்தப்படும்: முஜிபுர் ரஹ்மான்

விவாதத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல விடயங்கள் வெளிப்படுத்தப்படும்: முஜிபுர் ரஹ்மான்

அரசியல் கைதுகள் அரசுக்கு எதிராக மாறும் - மகிந்த எச்சரிக்கை

அரசியல் கைதுகள் அரசுக்கு எதிராக மாறும் - மகிந்த எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW