கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் புதிய தொழில்நுட்ப பயிற்சி உறுதி : சீன தூதுவர்

Batticaloa Sri Lanka Eastern Province China Ship In Sri Lanka Technology
By Rakshana MA Nov 21, 2024 11:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு, சீனாவில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான கருத்தரங்குகளை நடத்த சீனத்தூதுவரான கீய் சென்ஹோங் (Qi Zhenhong) உறுதி செய்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (21) சீனத்தூதுவருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலே இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த கலந்துரையாடலில் சீன தூதரக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

கிழக்கின் தேவைகள்

மேலும் இதில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்கள் என பல அடங்குவதுடன், கல்வித்துறை, மருத்துவதுறை, தொழிற்துறை, தொழிற்பயிற்சி வழங்குதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் அபிவிருத்தி, மாணவர்கள் பாடசாலை இடைவிலகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் புதிய தொழில்நுட்ப பயிற்சி உறுதி : சீன தூதுவர் | Chinese Envoy Confirms Tech Training In Batticaloa

அத்துடன் சீனத்தூதுவர், தற்போது இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதி வழங்கியுள்ளதுடன் கோவிட் தொற்று பாதிப்புற்றிருந்த காலத்தில் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு தேவையான தடுப்பு ஊசி மருத்துகளை வழங்கியதாகவும், கிழக்குப் பல்கலைக் கழத்திற்கு பல புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதையும், பொருளாதார விழ்ச்சி ஏற்பட்ட போது கிழக்கு மாகாண மக்களுக்கான உலர் உணவுகள் வழங்கப்பட்டதையும், அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவினால் கிழக்கு மாகாணத்திற்கு பல மில்லியன் ரூபா நிதி உதவி

சீனாவினால் கிழக்கு மாகாணத்திற்கு பல மில்லியன் ரூபா நிதி உதவி

கிழக்கின் அபிவிருத்தி

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், இன்னும் பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் புதிய தொழில்நுட்ப பயிற்சி உறுதி : சீன தூதுவர் | Chinese Envoy Confirms Tech Training In Batticaloa

தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி பிரதேசத்தில் சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை சீன தூதுவரினால் இன்று (21) திகதி கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சீனாவில் ஊடகத்துறை சார்ந்து புதிய தொழில்நுட்ப பயிற்சியைப் பெற்றுக் கொடுக்குமாறு சிவில் சமூகத்தினர் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதற்கு பதிலளித்த தூதுவர், இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் இதனை தான் முன்னின்று செய்து தருவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

சம்பிரதாயபூர்வமாக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி

சம்பிரதாயபூர்வமாக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGallery