அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Government Employee Sri Lanka
By Laksi Nov 21, 2024 07:36 AM GMT
Laksi

Laksi

2024 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிவரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

அரச சேவை

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். தற்போதைய அரசாங்கமே அதிகபடியான அரச சேவையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும்.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Salaries Of Government Employees Increased Anura

அந்தவகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், 2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

அத்துடன், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படுமென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி நியமனம்

பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி நியமனம்

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW