சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி
சீனாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கையளிப்பு நிகழ்வானது கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் சீனத்தூதுவர் உரையாற்றுகையில்,
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுமார் 5.2 பில்லியன் ரூபா பெறுமதியான 11.28 மில்லியன் மீற்றர் துணிகள் பரிசாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச உதவி..
மேலும், இந்த சீருடைகள் 10,096 அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கல்வி அமைச்சினால் 1992 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டு வருவதுடன் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாடசாலை சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீண்டும் 2021 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடம் இருந்து தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டன.
ஆனால் கோவிட்-19 தொற்றுநோயால் நாடு எதிர்கொண்ட பொருளாதார நிலைமை காரணமாக, சீன மக்கள் குடியரசு 2023 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ சீருடைத் தேவையில் 70% மானியமாகவும், மீதமுள்ள 30% உள்ளூர் புடவை உற்பத்தியாளர்களிடமிருந்தும் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் அதிகாரிகள், சீனத் தூதுவர் சி ஜான் ஹோங் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |