மட்டக்களப்பில் பெருமளவான போதைப்பொருட்களுடன் சிறுவன் கைது
மட்டக்களப்பு (Batticaloa)- கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியொன்றில் பெருமளவிலான போதைப் பொருட்களுடன் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, விசேட அதிரடிப்படையினரை கண்டு தனது உடமையில் மறைத்து வைத்திருந்த போதை பொருட்களை சிறுவன் வீசியுள்ளான்.
இதில் 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளும் பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரளா கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறுவனை கைது செய்து சான்று பொருட்களுடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |