சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பணிப்பாளர் நாயகத்தின் சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ப்ரீதி அனோமா சிறிவர்தனவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவரது சேவைக் காலத்தை மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
தேசிய சிறுவர் அதிகாரசபை பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய ப்ரீதி அனோமா சிறிவர்தன 60 வயது பூர்த்தியடைந்தமையால் (2024.11.02) தொடக்கம் ஓய்வுபெறுகின்றார்.
சேவைக் காலம் நீடிப்பு
தற்போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் மற்றும் மனிதவளம்) மற்றும் பணிப்பாளர் (நிதி) போன்ற உயர் முகாமைத்துவப் பதவி வெற்றிடங்கள் பல நிலவுகின்றன.
இந்நிலைமையின் கீழ் குறித்த அதிகாரசபையின் நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகளை இடையூறுகளின்றி நடாத்திச் செல்வதற்கு இயலுமான வகையில் ப்ரீதி அனோமா சிறிவர்தனவை 06 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் அமர்த்துவதற்காக மகளிர், சிறுவர் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் |