அதிரடி மாற்றம் கண்ட கோழி இறைச்சியின் விலை!
நாட்டில் தற்போது கோழி இறைச்சியினட விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையானது, 1,300 ரூபாவை விட அதிக விலைக்கு செய்யப்பட்டு வருகின்றது.
சில வர்த்தக நிலையங்களில் 1,100 ரூபா 1,200 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சியின் விலை
கோழிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையில் தற்போது விற்பனை செய்யப்படுவதில்லை. எனவே, கோழி இறைச்சிக்கு உரிய விலையை நிர்ணயித்து விற்பனை செய்யவும், கோழிக்கான விலையை குறைக்கவும் நுகர்வோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வாறான விலை உயர்வு குறித்து இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகரவிடம் வினவிய போது வார இறுதியில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளார். [
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |