இன்று சூரியனின் இயக்கத்தில் நிகழவுள்ள மாற்றம்!

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Apr 08, 2025 04:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் சில பகுதிகளில் சூரியனின் இயக்கம் காரணமாக ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க இன்று (08ஆம் திகதி) நண்பகல் 12:12 மணியளவில் நயினமடம, சந்தலங்காவ, குண்டசாலே, மஹியங்கனை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சூரியனின் இயக்கம்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சூரியனின் இயக்கத்தில் நிகழவுள்ள மாற்றம்! | Changes In Sun Movement Today

சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.    

பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு

பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு

இன்று உலக சுகாதார தினம்

இன்று உலக சுகாதார தினம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW