எரிபொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எரிபொருள் விலைத் திருத்தம்
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி நள்ளிரவில் எரிபொருள் விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த விலைகள் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதனடிப்படையில், 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரமே 06 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |