மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை
சந்தையில் மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வியாபாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறி செய்கைககள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் தொடர்ந்தும் பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையிலே மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என வியாபாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மரக்கறிகளின் புதிய விலைகள்
அதேநேரம், தம்புள்ளை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கப் பெறும் மரக்கறிகளின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு வரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில், சந்தையில் போஞ்சி ஒரு கிலோகிராம் விலை 400 முதல் 420 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் கரட் மற்றும் லீக்ஸ் என்பன கிலோவொன்று 130 முதல் 140 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 800 ரூபாவிற்கும், தக்காளி ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கறி மிளகாய் ஒரு கிலோ கிராம் 650 ரூபாவிற்கும், போஞ்சி ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பகுதி மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வெள்ளத்தினால் சேதமடைந்த சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய் மற்றும் சோயா அவரை ஆகிய பயிர்களுக்கு 40, 000 ரூபாவுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிலவரம்