இணைய கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் எந்தவொரு கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பணிப்பாளர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பல கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இணைய கட்டணங்களை இரகசியமான முறையில் அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.
மேலும், இது குறித்து உரிய நிறுவனங்கள் கலந்துரையாடியதுடன் கட்டண அதிகரிப்புக்களை மேற்கொள்ளவில்லை என எழுத்து மூலமான கடிதங்கள் பெறப்பட்டுள்ளன.
பரப்பப்டும் போலி தகவல்கள்
அத்துடன் போலியான தகவல்கள் குறித்து ஏமாற வேண்டாம். மேலும், தொலைத்தொடர்பு சேவைகள் தொடர்பான கட்டணங்களை அங்கீகரிக்கும் பணிப்பாளராக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உள்ளது.
இந்த நிலையில், எந்தவொரு கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கும் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனுமதியின்றி அதிகரிக்கப்படும் இணைய கட்டணங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும் என பணிபாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |