கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology
By Rukshy Oct 14, 2024 03:18 AM GMT
Rukshy

Rukshy

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு  கடும் மழைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இலங்கையை அண்மித்த வளிமண்டல குழப்பம் காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | Chance Of Heavy Rain

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த 3 சந்தேக நபர்கள் கைது

போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த 3 சந்தேக நபர்கள் கைது

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW