இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Cancer Sri Lanka
By Mayuri Oct 13, 2024 02:18 PM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 33,000க்கும் அதிகமான புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை இந்த நாட்டில் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களாகும்.

வாய்ப் புற்றுநோய்

ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதுடன், நாட்டின் சனத்தொகையில் 100,000 பேரில் 1,990 பேர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Cancer Patients Reported In Sri Lanka

ஆரோக்கியமான வாழ்க்கை முறைமையை ஊக்குவிப்பதன் மூலம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

புற்றுநோய் சிகிச்சையின் தரத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW