வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் செப்டெம்பரில் வீழ்ச்சி
வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்களினால் அனுப்பப்படும் பணத்தின் பெறுமதி குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டெம்பர் மாதத்தில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் அனுப்பப்பட்ட பணம் 556 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பப்பட்ட பணம் 577 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாயிலிருந்து டொலர்
இதனடிப்படையில் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு சென்ற பணியாளர்களினால் அனுப்பப்படும் பணத்தின் பெறுமதி குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட பணத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளினால் பெற்ற வருமானம் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் இந்த வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலும் 2,348 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறையின் மூலமாக ஈட்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |