அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஆராய குழு நியமனம்
அஸ்வெசும சமூக நலத்திட்டத்தின் மூலம் பயனடையும் பொது மக்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நலத்திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமையவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும நலத்திட்டம்
இது “உண்மையை பேசுவோம் தகுதியானவர்களுக்கு நன்மையினை வழங்குவோம்” எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும சமூக நலத்திட்டம் ஆகும்.
மேலும் இக்குழுவின் மூலம் குறித்த நலத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளை கொண்ட தகுதியான மக்கள் தொடர்பில் உள்ள குறைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஒரு மாத கால இடைவெளிக்குள் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |