சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் ஆரம்பமாகும் கண்புரை அறுவை சிகிச்சை
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக கடமையாற்றிய வைத்தியர் எஸ்.டீ.டீ.சன்ட்ரூவான் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தற்பொழுது கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக நியமனம் பெற்ற வைத்தியர் என்.டபள்யூ.அரவிந்தவினால் இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஆரம்பமாகும் சத்திரசிகிச்சை
இந்நிலையில், புதிதாக நியமனம் பெற்ற கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரினால் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வைத்தியரினால் கடந்த 28ஆம் திகதி முதலாவது கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த சத்திர சிகிச்சையினை மீள ஆரம்பிப்பதற்கும் அந்த சேவையினை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், தேவையான மருத்துவ உபகரணங்களும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மருத்துவ உபகரணங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவிற்கமைவாக உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் துரிதமாக செயல்பட்டு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |