பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு!

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Laksi Apr 01, 2025 09:53 AM GMT
Laksi

Laksi

ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று (01) முதல் 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னர் 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை 70 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என மில்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை முகாமையாளர் சம்பத் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு!

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு!

புதிய விலை

இந்த நிலையில், முன்னதாக 225 ரூபாய்க்கு விற்கப்பட்ட 450 மில்லி லிட்டர் நீண்ட நாள் பயன்படுத்தக் கூடிய திரவப் பாலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை  200 ரூபாவாகும்.

பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு! | Price Reduction Of Highland Milk Products

இதேவேளை, 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட 450 மில்லி லிட்டர் பால் பைக்கற்று 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை170 ரூபாவாகும்.

அத்தோடு, 440 ரூபாய்க்கு விற்கப்பட்ட 900 மில்லி லிட்டர் பால் பைக்கற்று 60 ரூபாய் குறைக்கப்பட்டு 380 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் சம்பத் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வியாழேந்திரனுக்கு இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வியாழேந்திரனுக்கு இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW