நுவரெலியாவில் பழமையான மரங்களை பாதுகாப்போம் : தொடரப்படும் வழக்கு

Law and Society Trust Nuwara Eliya Sri Lanka Sri Lankan Peoples Temple Trees
By Rakshana MA Nov 21, 2024 01:18 PM GMT
Rakshana MA

Rakshana MA

நுவரெலியாவில் பழைய மரங்களை சட்டவிரோதமாக அழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது என நுவரெலியா பிரதேச செயலாளர் டீ. ஏ. பீ. தலன்சூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாநகர சபைக்கு சொந்தமான குறித்த வளாகமானது கோல்ப் ஹோட்டலுக்கு குத்தகை முறையில் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரங்கள் மீதான பரிசோதனை

இதனால், குறித்த பகுதியில் உள்ள மரங்களை அகற்றி புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு, அதிக இலைகள் கீழே விழுவது போன்ற காரணங்களை முன்வைத்து மரங்களை அழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் பழமையான மரங்களை பாதுகாப்போம் : தொடரப்படும் வழக்கு | Case To Protect Ancient Trees In Nuwara Eliya

இவ்வாறான காரணங்களை கூறி நன்கு வளர்ச்சியடைந்த 31 மரங்களின் அடிப்பகுதியில் உள்ள தோல்களை அகற்றி மரங்கள் பட்டுப்போவதற்கு தார் மற்றும் சில இராசாயனத்தை கலந்து பூசப்பட்ட்டுள்ளதாக பரிசோதனைகளை மேற்கொண்ட உயர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும், அந்த மரங்கள் மீண்டும் துளிர்க்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.

36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காக கொண்டு பயணிக்கும் புதிய அரசாங்கம்!

36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காக கொண்டு பயணிக்கும் புதிய அரசாங்கம்!

மரங்களை அழிக்க சூட்சுமம்

எனினும் குறித்த மரங்களை அகற்றுவதற்கு முன்னதாக கடிதம் மூலம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், இதனை மறுத்து மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கப்படும் என குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே சூட்சுமமான முறையில் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நுவரெலியாவில் பழமையான மரங்களை பாதுகாப்போம் : தொடரப்படும் வழக்கு | Case To Protect Ancient Trees In Nuwara Eliya

இதனால் நுவரெலியா மாநகர சபை , பிரதேச செயலகம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் அனைத்தும் இணைந்து ஹோட்டல் உரிமையாளர் சட்டத்தை மீறியிருப்பதை உறுதி செய்துள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக உச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர் டீ. ஏ. பீ. தலன்சூரிய தெரிவித்துள்ளார்.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா ஏற்பாடுகள் ஆரம்பம் !

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா ஏற்பாடுகள் ஆரம்பம் !

புதிய அரசாங்கத்தில் 29 பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தில் 29 பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery