தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (23) முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படாது என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறை இரத்து
அத்தோடு, ஏதேனும் சுகவீனம் அல்லது அவசியமான பணிகளுக்காக விடுமுறை எடுப்பது அவசியமானால், மாகாண பிரதி தபால் மா அதிபரின் ஒப்புதலுக்கு அமைய விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ,இன்று பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |