தாடி வளர்த்து தொப்பி அணிந்தால் பயங்கரவாதியா...! ஆதங்கப்பட்ட தேரர்

By Rakshana MA Jul 13, 2025 05:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தும் மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று கையெழுத்து பெறலும் மற்றும் துண்டுப்பிரசுரப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஆக்கத்திறன் விருது விழா

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஆக்கத்திறன் விருது விழா

சமவுரிமை போராட்டம்

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இராஜேந்திரா, சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தாடி வளர்த்து தொப்பி அணிந்தால் பயங்கரவாதியா...! ஆதங்கப்பட்ட தேரர் | Call To Repeal Pta In Batticaloa

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவும், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட நீதிவழங்கவும் அனைத்து இன மக்களின் உரிமையினை உறுதிசெய்யும் சமவுரிமையுடைய அரசியலமைப்பினை உருவாக்கு ஆகிய கோரிக்கைகளை அடங்கியதாக இந்த கையெழுத்து, துண்டுப்பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், "பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வடகிழக்கில் இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே இந்த சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இன்று வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இன்றுவரையில் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னெடுக்கப்படுகின்றன.

[CRB5SDB

பயங்கரவாத தடை சட்டம் 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கடந்த காலத்தில் பலவழிகளிலும் பல செயற்பாடுகளை முன்னெடுத்த அமைப்பு ஜேவிபியாகும்.

ஆனால் அந்த பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி இன்று 12 பேரை இந்த தேசிய மக்கள் சக்தி அரசு கைதுசெய்துள்ளது. இந்த அரசாங்கமும் பழைய அரசுகளின் அடிபாதையிலேயே செல்கின்றன.

தாடி வளர்த்து தொப்பி அணிந்தால் பயங்கரவாதியா...! ஆதங்கப்பட்ட தேரர் | Call To Repeal Pta In Batticaloa

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிடுமாறு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பில் கோருகின்றேன்.

கடந்த தேர்தல் காலத்தில் யாழில் வைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதியைப்பெற்றுத் தருவதற்கு நாங்களும் செயற்படுவோம் என்று கூறியவர்கள் இன்றுவரையில் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

பயங்கரவாத தடை பழைய சட்டத்தினை திருத்தப் போகின்றோம், நீக்கப்போகின்றோம் என்று கூறியவர்கள் இன்று புதிய பயங்கரவாத சட்டத்தினை கொண்டு வருகின்றார்கள்.

கடந்த காலத்தில் ரணில், கோட்டாபய ராஜபக்சவின் பாதையிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான குரல்கொடுக்க வேண்டும்.

கிழக்கு ஆளுநரை சந்தித்த திருகோணமலை மாநகர முதல்வர்! எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

கிழக்கு ஆளுநரை சந்தித்த திருகோணமலை மாநகர முதல்வர்! எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

முஸ்லிம் இளைஞர் கைது 

இஸ்ரேலுக்கு எதிராக துண்டுபிரசுரம் ஒட்டியதற்காக பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி முஸ்லிம் இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

நானும் இஸ்ரேலுக்கு எதிராக முகப்புத்தகத்தில் பதிவுசெய்துள்ளோம். ஆனால் இந்த செயற்பாடு இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தமிழ்-முஸ்லிம் இளைஞர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

தாடி வளர்த்து தொப்பி அணிந்தால் பயங்கரவாதியா...! ஆதங்கப்பட்ட தேரர் | Call To Repeal Pta In Batticaloa

மக்கள் இதற்காக இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 30வருடகாலமாக வடகிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, காணாமல்ஆக்கப்பட்டவர்கள், காணி பிரச்சினையென பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

பல்வேறு பிரச்சினைக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றால் கோத்தபாயவுக்கு நடைபெற்றதே உங்களுக்கும் நடக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.   

பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த பயங்கரம்: தொடரும் விசாரணை

பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த பயங்கரம்: தொடரும் விசாரணை

கடன் சுமையுடன் கிண்ணியா பிரதேச சபை! புதிய தவிசாளரின் நிலை..

கடன் சுமையுடன் கிண்ணியா பிரதேச சபை! புதிய தவிசாளரின் நிலை..

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW