அதிகரிக்கவுள்ள பேருந்து கட்டணம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பேருந்து கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன(Kemunu Wijeratna) தெரிவித்துள்ளார்.
இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
வருட நடுவில் கண்டிப்பாக பேருந்து கட்டணத்தை திருத்த வேண்டும்.
அதிகரிக்கும் கட்டணம்
மேலும், எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும், அவ்வாறு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எரிபொருளின் விலை மாத்திரமன்றி உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும்.
அத்துடன் சாதாரண பேருந்து ஒன்றின் விலை 100,000,000 வரை அதிகரித்துள்ளதுடன் ஏனைய செலவினங்களும் அதிகரித்துள்ளது, அதனை ஜூலை மாதத்திற்குள் கணக்கீடு செய்ய வேண்டும். எனவே பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.
பேருந்தின் விலை அதிகமாகி விட்டதனால், எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்தோம். குறைந்த பட்சம் 30% குறையும் என்று ஆனால் இப்போது நட்டத்தில் இயங்குகிறோம்.
ஆகவே, பெரிய தொகையை குறைத்தால் அந்த பலனை மக்களுக்கு கொடுக்க பாடுபடுவோம். 4% வந்தால் முழுமையாக குறைக்க பாடுபடுவோம். ஆனால் அது கனவாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |