மட்டக்களப்பில் வீட்டு வேலையில் ஈடுபடுபவர்களுக்கான சம்பளப்பட்டியல் வெளியீடு

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Kalmunai
By Rakshana MA Jan 01, 2025 10:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பிலுள்ள வீட்டுவேலை செய்யும்  தொழிலாளர்களின் அடிப்டை சம்பளம் நாள் ஒன்றிற்கு (8 மணித்தியாலத்திற்கு) 2000ரூபாவாக நிர்ணயித்து இது தொடர்பான சம்பளப்பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பளப்பட்டியல் வெளியீடு, மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில் நேற்று(31) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 450 மேற்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

சம்பளப்பட்டியல் 

இந்த நிலையில் இந்த வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குபவர்கள் ஒரு வேலைக்கு என அழைத்து ஏனைய வெலைகளை வாங்கி கொண்டு அவர்களின் ஊழைப்பிற்கு ஏற்ற சம்பளங்களை வழங்காது சாப்பாட்டு பார்சலை வழங்கி, குறைந்த ஊதியத்தை வழங்கி அவர்களை அவமதித்து நடாத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பில் வீட்டு வேலையில் ஈடுபடுபவர்களுக்கான சம்பளப்பட்டியல் வெளியீடு | List Of Batticaloa Domestic Servants Salaries

இவ்வாறு வீட்டுவேலை செய்யும் தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்துள்ளோம்.

இதற்கமைய, 8 மாணிநேர வேலைக்கு 2000 ரூபாவும், 4 மணித்தியால வேலைக்கு 1500 ரூபாவும், ஒருமணிநேர வேலைக்கு 500ரூபாவும், 8 மணித்தியாலயத்திற்கு மேல் வேலை செய்தால் ஒரு மனித்தியாலயத்திற்கு 250 ரூபாவும், தங்கி வேலை செய்வேருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும், தொழில் வழங்குபவர்களால் வழங்கப்படவேண்டும் என்பதற்காக சம்பளப்பட்டியல் ஒன்றை நிர்ணயித்து அதனை துண்டுபிரசுரம் மூலமாக பொது இடங்களில் விநியோகிக்க உள்னோம்.

மண்ணெண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மண்ணெண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தொழிலாளர் சங்கம்

எனவே, எமது சங்கம் கண்டியை தலைமையமாக கொண்டு பல மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. இந்த சங்கத்திலுள்ள வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மட்டக்களப்பில் வீட்டு வேலையில் ஈடுபடுபவர்களுக்கான சம்பளப்பட்டியல் வெளியீடு | List Of Batticaloa Domestic Servants Salaries

இதனையடுத்து சம்பள பட்டியல் துண்டு பிரசுரத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் இடம்கையளித்து வெளிட்டுவைத்த பின்னர் துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

கோவிட் நோயின் தோற்றம் குறித்த தரவுகளை சமர்ப்பிக்க சீனாவுக்கு வெளியான அறிக்கை

கோவிட் நோயின் தோற்றம் குறித்த தரவுகளை சமர்ப்பிக்க சீனாவுக்கு வெளியான அறிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW