மண்ணெண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Rakshana MA Jan 01, 2025 06:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

நேற்று(31.12.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய்யின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

விலை மாற்றம்

இதேவேளை ஜனவரி மாதத்தில் ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா ஐஓசி(IOC) மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் தங்களது எரிபொருட்களின் விலையை மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளன.

மண்ணெண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Fuel Prices In Sri Lanka

இதற்கமைய, ஒக்டென் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 309 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும் தொடர்ந்தும் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் லீட்டரொன்றின் விலையை 286 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டரொன்றின் விலையை 313 ரூபாவாகவும் தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

பண்டிகை கால உதவித்தொகையை 40,000 ஆக உயர்த்த அரசு ஊழியர்கள் கோரிக்கை!

பண்டிகை கால உதவித்தொகையை 40,000 ஆக உயர்த்த அரசு ஊழியர்கள் கோரிக்கை!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW