பண்டிகை கால உதவித்தொகையை 40,000 ஆக உயர்த்த அரசு ஊழியர்கள் கோரிக்கை!
10,000 ரூபா பண்டிகை முன்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு அரச அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு 10,000 ரூபா பண்டிகை முன்பணம் போதாது என மேற்படி கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கு அரசு வழங்கும் 6,000 ரூபாய் உதவித்தொகையை அரச ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊழியர்களின் கோரிக்கை
இதேவேளை, நிவாரணத் திட்டத்தில் உள்வாங்கப்படாத ஏனைய தகுதியுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |