உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன திலக(T.Nandana Thilaka) தெரிவித்துள்ளார்.
பொறுப்புகளை ஏற்றதன் பின்னர் நேற்றைய தினம்(28) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் தற்போது உப்புக்கான தட்டுப்பாடு காணப்படும் நிலையில் இதற்கான தீர்வாகவே குறித்த தொகை உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது.
6000 மெற்றிக்தொன் உப்பு
மேலும், தேவையற்ற வகையில் உப்பைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு, நந்தன திலக பொதுமக்களைக் கோரியுள்ளார்.
அத்துடன், ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திடம் 6,000 மெற்றிக்தொன் உப்பு கையிருப்பில் உள்ளது.
மேலும், அந்த உப்பு கையிருப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |