அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

Sri Lanka Police Jaffna Ramanathan Archchuna
By Rakshana MA Feb 12, 2025 10:14 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

யாழில் நேற்று இரவு, தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்குள் வைத்து அர்ச்சுனா எம்.பி காணொளி எடுக்க முற்பட்ட போது, அங்கு நின்ற நபருக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை விடுதிக்குள் வைத்து துரத்தி துரத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காணொளி தற்சமயம் வெளியாகியுள்ளது. எனினும், குறித்த நபர் தன்னைத் தாக்கியதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW