பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

Sri Lanka Sri Lanka Cabinet United Kingdom IMF Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Nov 06, 2024 02:20 PM GMT
Laksi

Laksi

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான உதவிகளை வழங்கத் தயாரென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் (Andrew Patrick) உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் ஆகியோருக்கு இடையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையிலே,  இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

இருதரப்பு உறவு

இதன்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி | British Aid To Increase Sl Government Revenue

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் பாராட்டுவதாகவும், ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அன்ட்ரு பெட்றிக் உறுதியளித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

ஊழல் மோசடி

 உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் பிரித்தானியாவில் காணப்படும் முறைமை முக்கியமானது என்றும், அந்த முறையில் ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்த முடியும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறி்ப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி | British Aid To Increase Sl Government Revenue

மேலும் , பிரித்தானிய நாடாளுமன்ற முறைமைகள் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW