ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக இலஞ்சம் பெற முற்பட்ட குழுவினர் கைது
ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 3 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட குழுவொன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (14) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது நடவடிக்கை
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 03 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று காலை கட்டுப் பணத்தை செலுத்திய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |