பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
2025ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு(Ministry of Education) அறிவித்துள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வேலைத்திட்டத்திற்கென ஒரு மாணவனுக்கு தலா 110 ரூபா வீதம் கல்வி அமைச்சு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான காலையுணவு..
இது தேசியப்பாடசாலைகள் அல்லாத மாகாணப் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டமாகும்.
இதேவேளை, 2025ம் ஆண்டுக்கென முதலாம் தர மாணவர்களை உத்தியோகபூர்வமாக பாடசாலைகளில் உள்ளெடுப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனவரி 31ஆம் திகதி இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |